வரலாற்றில் முதல் முறையாக ஜனாதிபதியின் பதில் செயலாளராக பெண் ஒருவர் நியமனம்

Colombo (News 1st) ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இந்தியாவிற்கு விஜயம் மேற்கொண்டுள்ளதால், ஜனாதிபதியின் கீழ் உள்ள அமைச்சுகளுக்கு பதில் அமைச்சர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இதற்கிணங்க, பாதுகாப்பு பதில் அமைச்சராக பிரமித்த பண்டார தென்னகோன் நியமிக்கப்பட்டுள்ளார்.

ஷெஹான் சேமசிங்க, நிதி மற்றும் பொருளாதார மறுசீரமைப்பு பதில் அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளதுடன், திலும் அமுனுகம பதில் முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்.

கனக ஹேரத் பதில் தொழில்நுட்ப அமைச்சராகவும் அனூப பெஸ்குவல் பதில் பெண்கள், சிறுவர்கள் மற்றும் சமூக வலுவூட்டல் பதில் அமைச்சராகவும் நியமிக்கப்பட்டுள்ளார்.

இதேவேளை, சாந்தனி விஜேவர்தன ஜனாதிபதியின் பதில் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

இன்று முதல் அமுலுக்கு வரும் வகையில், இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளதுடன், ஜனாதிபதியின் செயலாளர் நாடு திரும்பும் வரை இது அமுலில் இருக்கும்  என ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

ஜனாதிபதியின் பதில் செயலாளராக பெண் ஒருவர் நியமிக்கப்பட்டமை வரலாற்றில் இதுவே முதல் தடவையாகும்.

சிரேஷ்ட அரச அதிகாரியான சாந்தனி விஜேவர்தன தற்போது ஜனாதிபதியின் சிரேஷ்ட மேலதிக செயலாளராக கடமையாற்றி வருகின்றார்.

Previous article
Colombo (News 1st) மலையக மக்களின் பிரச்சினைகள் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் குறித்து இந்திய பிரதமருடன் அமைச்சர் ஜீவன் தொண்டமான் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார். ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில், அமைச்சர் ஜீவன் தொண்டமான் உள்ளிட்ட இலங்கை தூதுக்குழுவினர் இந்தியாவிற்கு புறப்பட்டுச் சென்றுள்ள நிலையில், அங்கு முக்கியத்துவமிக்க சந்திப்புகளை நடத்தவுள்ளதாக நீர் வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. இலங்கை தூதுக்குழுவில் இடம்பெற்றுள்ள அமைச்சர் ஜீவன் தொண்டமான், மலையக மக்களின் பிரச்சினைகள், கோரிக்கைகள் தொடர்பில் இந்தியத் தரப்பினருக்கு எடுத்துரைக்கவுள்ளதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. மலையக தமிழர்கள் இலங்கைக்கு வந்து 200 வருடங்கள் கடந்துள்ள நிலையில், அவர்களை கௌரவப்படுத்தும் வகையில் அரச அங்கீகாரத்துடன் தேசிய மட்ட நிகழ்வு எதிர்வரும் நவம்பரில் நடத்தப்படவுள்ளது.
Next article

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles