Colombo (News 1st) மலையக மக்களின் பிரச்சினைகள் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் குறித்து இந்திய பிரதமருடன் அமைச்சர் ஜீவன் தொண்டமான் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார். ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில், அமைச்சர் ஜீவன் தொண்டமான் உள்ளிட்ட இலங்கை தூதுக்குழுவினர் இந்தியாவிற்கு புறப்பட்டுச் சென்றுள்ள நிலையில், அங்கு முக்கியத்துவமிக்க சந்திப்புகளை நடத்தவுள்ளதாக நீர் வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. இலங்கை தூதுக்குழுவில் இடம்பெற்றுள்ள அமைச்சர் ஜீவன் தொண்டமான், மலையக மக்களின் பிரச்சினைகள், கோரிக்கைகள் தொடர்பில் இந்தியத் தரப்பினருக்கு எடுத்துரைக்கவுள்ளதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. மலையக தமிழர்கள் இலங்கைக்கு வந்து 200 வருடங்கள் கடந்துள்ள நிலையில், அவர்களை கௌரவப்படுத்தும் வகையில் அரச அங்கீகாரத்துடன் தேசிய மட்ட நிகழ்வு எதிர்வரும் நவம்பரில் நடத்தப்படவுள்ளது.

Colombo (News 1st) 328 பொருட்களுக்கு விதிக்கப்பட்டிருந்த இறக்குமதி கட்டுப்பாடுகள் இன்று (20) நள்ளிரவுடன் நீக்கப்படவுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்தார்.

இறக்குமதி கட்டுப்பாடுகள் நீக்கப்படும் பொருட்களின் விபரங்களை அவர் அறிவிக்கவில்லை.

எனினும், இந்த  பட்டியலில் பழ வகைகள், மரக்கறி, வாகன உதிரிப் பாகங்கள், தொலைக்காட்சிப் பெட்டிகள், சலவை இயந்திரங்கள், மின்சாதனப் பொருட்கள், அழகுசாதனப் பொருட்கள் அடங்குவதாக ஏற்றுமதி இறக்குமதி கட்டுப்பாட்டாளர் தெரிவித்தார்.

நாட்டில் நிலவும் பொருளாதார நெருக்கடியின் போது, பொருட்களுக்கு விதிக்கப்பட்ட இறக்குமதி கட்டுப்பாடுகளால் 1. 7 பில்லியன் டொலர் சேமிக்கப்பட்டதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய பாராளுமன்றத்திற்கு அறியத்தந்திருந்தார்.

 

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles