பொலிஸார் கைது செய்ய சென்ற போது தன்னைத்தானே குத்திக்கொண்ட சந்தேகநபர் வைத்தியசாலையில் அனுமதி

Colombo (News 1st) ஹொரணை – அங்குருவாதொட்டயில் தாயும் பெண் குழந்தையும் கொலை செய்யப்பட்ட சம்பவத்தின் சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கொலை செய்யப்பட்ட பெண்ணின் கணவரது சகோதரியின் கணவரே கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.

வரக்காகொடையில் உள்ள அவரது இல்லத்தில் வைத்து சந்தேகநபர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கைது செய்யச் சென்ற பொலிஸ் அதிகாரிகளை சந்தேகநபர் கூரிய ஆயுதத்தால் தாக்க முயற்சித்துள்ளார்.

இதனைத் தடுக்க முற்பட்ட போது, சந்தேகநபர் தன்னைத்தானே குத்திக்கொண்டதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.

சந்தேகநபர் தற்போது பொலிஸ் பாதுகாப்பில் ஹொரணை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.

கடந்த 18 ஆம் திகதி முதல் காணாமற்போயிருந்த 24 வயதான பெண்ணும், அவரது 11 மாதங்களேயான பெண் குழந்தையும் அங்குருவாத்தொட்ட – ஊருதுடாவ காட்டுப் பகுதியிலிருந்து நேற்று சடலங்களாக கண்டெடுக்கப்பட்டனர்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles