அமரர் லஜினி விக்கினேஸ்வரன்

மலர்வு04 AUG 1980, உதிர்வு24 JUL 2021

வயது 40

புங்குடுதீவு, Sri Lanka (பிறந்த இடம்) Ontario, Canada Savigny-le-Temple, France

யாழ். புங்குடுதீவு மடத்துவெளி 8ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கனடா Ontario, பிரான்ஸ் Savings-Le Temple ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த லஜினி விக்கினேஸ்வரன் அவர்களின் 2ம் ஆண்டு நினைவஞ்சலி.

ஆயிரம் சொந்தங்கள் அருகிருந்தும்
உங்களின் அன்பிற்கு ஈடாகுமா?
உங்கள் நினைவுகளால் நித்தமும்
கலங்குகின்றோம் அம்மா!

ஒரு முறை வந்து எங்கள்
துயர் துடைக்க வேண்டாமா?
தேவதை அம்மாவை நாங்கள்
தொலைத்து விட்டோமே!

என் மனதோடு போராடும்
உன் மறையாத ஞாபகங்கள்
என்னை என்றும் வாட்டுதையோ!
ஆறா துயர் தந்து மீளாத்துயில்
கொண்டாய் – நீ வருவாய் என்று
நான் காத்திருந்த காலங்கள் போய்
இன்று ஆண்டு இரண்டாகி விட்டது

இரண்டாண்டு என்ன?
ஈராயிரம் ஆண்டுகள் சென்றாலும்
ஆறாது என் துயரம் உங்கள் அழகு வதனம்
காணாமல் தவிக்கின்றோம்
நாம் போகும் இடமெல்லாம்
உங்கள் அழகு வதனம் தெரிகின்றதா
என தேடிப்பார்க்கின்றோம் ஒரு
இடமும் காணவில்லையே ….

எங்கள் அன்புத் தெய்வத்தின் ஆத்மா சாந்தியடைய
இறைவனை வேண்டுகின்றோம்…

தகவல்: குடும்பத்தினர்

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here


Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles