இலங்கை – பாகிஸ்தான் 2ஆவது டெஸ்ட : மழையால் தடைப்பட்டுள்ள 2ஆம் நாள் ஆட்டம்

இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கிடையிலான 2ஆவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் இன்றைய(25) இரண்டாம் நாள் ஆட்டம் மழை காரணமாக தடைப்பட்டுள்ளது.

கொழும்பு எஸ்.எஸ்.சி மைதானத்தில் நடைபெறும் இந்தப் போட்டியில் 2 விக்கெட் இழப்புக்கு 145 ஓட்டங்களுடன் முதல் இன்னிங்ஸை தொடர்ந்த பாகிஸ்தான் அணி மேலும் 33 ஓட்டங்களைப் பெற்ற நிலையில் மழை குறுக்கிட்டது.

முற்பகல் 11.25 அளவில் மழை பெய்ய ஆரம்பித்ததுடன் பிற்பகல் ஒரு மணி வரை ஆட்டத்தை ஆரம்பிக்க சந்தர்ப்பம் கிடைக்கவில்லை.

பாகிஸ்தான் அணி 2 விக்கெட் இழப்புக்கு 178 ஓட்டங்களைப் பெற்றுள்ளதுடன் அதற்கமைய 12 ஓட்டங்களால் முன்னிலை அடைந்துள்ளது.

அப்துல்லா ஷாபிக் 87 ஓட்டங்களுடனும் அணித்தலைவர் பாபர் அசாம் 28 ஓட்டங்களுடனும் ஆட்டமிழக்காதுள்ளனர்.

போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி முதல் நாளான நேற்று(24) 166 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுகளையும் இழந்ததும் குறிப்பிடத்தக்கது.

Previous article
Colombo (News 1st) இலங்கை ரூபாவானது மூன்று வாரங்களுக்குள் ஆசியாவின் சிறந்த நாணய அலகாகப் பதிவாகி, மீண்டும் ஆசியாவின் பலவீனமான நாணய அலகாக மாற்றமடைந்துள்ளதாக Bloomberg செய்திச்சேவை தெரிவித்துள்ளது. வட்டி வீதங்கள் குறைக்கப்பட்டமை மற்றும் இறக்குமதி கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டமை ஆகியவற்றின் காரணமாக டொலருக்கான கேள்வி உயர்வடைந்தமையே இதற்கான காரணமாக அமைந்துள்ளதாக Bloomberg குறிப்பிட்டுள்ளது. இந்த ஆண்டு இறுதியில் டொலரின் பெறுமதி 355 ரூபா வரை உயர்வடையும் என Hong Kong-இல் அமைந்துள்ள Natixis நிறுவனத்தை மேற்கோள்காட்டி Bloomberg இதனை தெரிவித்துள்ளது. டொலரின் இன்றைய விற்பனை பெறுமதி 336 ரூபா 16 சதம் வரை உயர்வடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Next article

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here


Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles