ஜப்பான் வௌிவிவகார அமைச்சர் இலங்கை வருகிறார்

Colombo (News 1st) ஜப்பானின் வௌிவிவகார அமைச்சர் Yoshimasa Hayashi எதிர்வரும் 28 ஆம் திகதி இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளார்.

இந்த விஜயத்தின் போது வௌிவிவகார அமைச்சர் அலி சப்ரியுடன் ஜப்பானின் வௌிவிவகார அமைச்சர் கலந்துரையாடலில் ஈடுபடவுள்ளதாக வௌிவிவகார அமைச்சு வௌியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், அவர் மரியாதை நிமித்தம் ஜனாதிபதி மற்றும் பிரதமரையும் சந்திக்கவுள்ளதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஜப்பான் வௌிவிவகார அமைச்சருடன் சிரேஷ்ட வௌியுறவுக் கொள்கை ஒருங்கிணைப்பாளர், தென்கிழக்கு மற்றும் தென்மேற்கு ஆசிய விவகாரங்களுக்கான பணிப்பாளர் நாயகம் அரிமா யுடகா, சர்வதேச ஒத்துழைப்பிற்கான பணிப்பாளர் நாயகம் உள்ளிட்ட 22 உறுப்பினர்களைக் கொண்ட குழுவினரும் கலந்துகொள்ளவுள்ளனர்.

இலங்கையில் உள்ள ஜப்பானின் உத்தியோகபூர்வ அபிவிருத்தி உதவித்தளங்களில் ஒன்றையும் பிரதிநிதிகள் குழுவினர் பார்வையிடவுள்ளனர்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here


Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles