இரு வேறு பகுதிகளில் இரு சடலங்கள் மீட்பு

Colombo (News 1st) மன்னார் – ஜப்பான் நட்புறவு பாலத்திற்கு அருகிலுள்ள கடற்கரையிலிருந்து சடலமொன்று மீட்கப்பட்டுள்ளது.

கிடைக்கப்பெற்ற தகவலுக்கு அமைய சடலம் மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

35 முதல் 45 வயதுக்கு இடைப்பட்ட ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

சடலம் தற்போது மன்னார் வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, ஹபரணை வாரச் சந்தைக்கு அருகிலிருந்து சடலமொன்று மீட்கப்பட்டுள்ளது.

40 முதல் 45 வயது மதிக்கத்தக்க ஒருவரே சடலமாக மீட்கப்பட்டுள்ளதுடன், பொலன்னறுவை வைத்தியசாலையின் பிரேத அறையில் சடலம்  வைக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles