கல்கிசையில் இருந்து காங்கேசன்துறைக்கு புதிய ரயில் சேவை ஆரம்பம்

Colombo (News 1st) கல்கிசையில் இருந்து காங்கேசன்துறை வரையில் புதிய ரயில் சேவை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

யாழ் நிலா எனும் பெயரில் இந்த ரயில் சேவை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக ரயில்வே பிரதி பொது முகாமையாளர் N.J. இந்திபொலகே தெரிவித்துள்ளார்.

பிரதி சனிக்கிழமைகளில் கல்கிசையில் இருந்து இரவு 10 மணிக்கு காங்கேசன்துறை நோக்கி இந்த ரயில் சேவை முன்னெடுக்கப்படுகிறது.

அத்துடன், பிரதி ஞாயிற்றுக்கிழமைகளில் இரவு 9.30-க்கு காங்கேசன்துறையில் இருந்து கல்கிசை ​நோக்கி இந்த ரயில் சேவை முன்னெடுக்கப்படவுள்ளது.

ஒருவழிப் பயணத்திற்கான முதலாம் வகுப்புக் கட்டணமாக 4,000 ரூபா அறவிடப்படுகின்றது.

நல்லூர் திருவிழாவை முன்னிட்டு எதிர்வரும் 18 ஆம் திகதி முதல் நாளாந்தம் இந்த ரயில் சேவையை முன்னெடுக்க திட்டமிடப்பட்டுள்ளதாக ரயில்வே பிரதி பொது முகாமையாளர் N.J.இந்திபொலகே தெரிவித்துள்ளார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles