![88b47a9f-shooting[1]-494730-495861-505208-500229 - Sangathy News](https://i0.wp.com/sangathy.com/wp-content/uploads/2023/08/88b47a9f-shooting1-494730-495861-505208-500229.jpg?resize=696%2C261)
Colombo (News 1st) வெலிவேரிய – ஜூபிலி மாவத்தையில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் காயமடைந்துள்ளார்.
இன்று (05) அதிகாலை மோட்டார் சைக்கிளில் பயணித்த இருவர் காரில் இருந்த இளைஞர் ஒருவர் மீது இந்த துப்பாக்கிச்சூட்டை மேற்கொண்டுள்ளனர்.
உடுகம்பொல பகுதியை சேர்ந்த 28 வயதான இளைஞரே காயமடைந்து கம்பொளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சந்தேநபர்களை கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

