13 ஆவது அரசியலமைப்பு திருத்தம் தொடர்பான முன்மொழிவுகளை சமர்ப்பிக்குமாறு பாராளுமன்ற கட்சித் தலைவர்களுக்கு அறிவிப்பு

 Colombo (News 1st) 13 ஆவது அரசியலமைப்பு திருத்தம் தொடர்பான  முன்மொழிவுகளை சமர்ப்பிக்குமாறு பாராளுமன்ற கட்சித் தலைவர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு குறிப்பிட்டுள்ளது.

பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்து அரசியல் கட்சிகள் மற்றும் குழுக்களின் பரிந்துரைகளை எதிர்வரும் 15 ஆம் திகதிக்கு முன்னர் சமர்ப்பிக்குமாறும்  ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க எழுத்து மூலம் அறிவித்துள்ளார்

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் பணிப்புரையின் கீழ் இந்த அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு அறிவித்துள்ளது.

தேசிய நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் நோக்கில், கடந்த  26 ஆம் திகதி ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் தலைமையில்  சர்வகட்சி மாநாடு நடைபெற்றது.

இதில் கலந்துரையாடப்பட்ட  விடயங்களுக்கு அமைவாக  முன்மொழிவுகளை சமர்ப்பிக்குமாறு பாராளுமன்ற கட்சித் தலைவர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு சுட்டிக்காட்டியுள்ளது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles