ஈக்வடாரில் ஜனாதிபதி வேட்பாளர் கொலை; 6 வௌிநாட்டவர்கள் கைது

Ecuador: தென் அமெரிக்க நாடான ஈக்வடாரில் ஜனாதிபதி வேட்பாளர் கொலை செய்யப்பட்டமை தொடர்பில் வௌிநாட்டவர் 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஈக்வடாரில்  ஜனாதிபதி தேர்தல் எதிர்வரும் 20 ஆம் திகதி நடைபெறவுள்ளது.

தேர்தலில் வேட்பாளர்களாக 8 பேர் போட்டியிடவிருந்த நிலையில், அவர்களில் ஒருவரான Fernando Villavicencio சுட்டுக்கொல்லப்பட்டார்.

பத்திரிகையாளரான இவர் ஊழலுக்கு எதிராக தொடர்ந்து குரல்கொடுத்து வந்ததாக கூறப்பட்டுள்ளது.

தேர்தலில் களம் இறங்கிய Fernando Villavicencio தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வந்தார். தலைநகர்  Quito-வில் நடந்த பொதுக்கூட்டத்தில் அவர் கலந்து கொண்டு பேசினார்.

பின்னர் தேர்தல் பிரசாரத்தை முடித்துக்கொண்டு தனது காருக்கு திரும்பிய போது, கூட்டத்தில் இருந்த மர்ம நபரால் அவர் சுட்டுக்கொல்லப்பட்டார்.

பொலிஸார் குற்றவாளிகளை தீவிரமாக தேடிவந்த நிலையில், தலைநகர் Quito-வில், ஆயுதங்களுடன் ஒரு வீட்டில் பதுங்கியிருந்த  6 பேரை கைது செய்துள்ளனர். 6 பேரும் வெளிநாட்டினர் என தெரியவந்துள்ளது.

இந்த கொலை பயங்கரவாத தாக்குதலான அரசியல் குற்றம் என விபரித்துள்ள ஈக்வடார் அதிபர்  Guillermo Lasso, அவர்கள் எந்த நாட்டைச் சேர்ந்தவர்கள் என தெரிவிக்கவில்லை.

நாடு முழுவதும் 60 நாட்களுக்கு அவசர நிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here


Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles