உடவலவ நீர் 3 நாட்களுக்கு மாத்திரமே போதுமானது – மகாவலி அதிகார சபை

Colombo (News 1st) உடவலவ நீர்த்தேக்கத்தின் நீர் கொள்ளளவு 3 நாட்களுக்கு மாத்திரமே போதுமானதென இலங்கை மகாவலி அதிகார சபை தெரிவித்துள்ளது.

தற்போது சுமார் 5000 ஏக்கர் அடி நீர் கொள்ளளவு மாத்திரமே காணப்படுவதாக அதிகார சபை குறிப்பிட்டுள்ளது.

சமனல வாவியிலிருந்து உடவலவ நீர்த்தேக்கத்திற்கு நேற்று(12) 2300 ஏக்கர் அடி நீர் திறந்து விடப்பட்டுள்ளது.

அதற்கமைய, நேற்று(12) பிற்பகல் வேளையில் இடது கால்வாய் ஊடாக மயூரபுர மற்றும் சூரியவெவ பகுதிகளுக்கு நீர் திறந்துவிடப்பட்டது.

தெற்கு கால்வாய் ஊடாக நாளை(14) அங்குனுகொலபெலஸ்ஸவிற்கு நீர் திறந்துவிடப்படும் என இலங்கை மகாவலி அதிகார சபை தெரிவித்துள்ளது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here


Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles