லொறி – மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் மாணவன் பலி

Colombo (News 1st) யாழ்ப்பாணம் – சாவகச்சேரி A9 வீதியின் கைதடி நுணாவில் பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

மாட்டு வண்டி சவாரிக்காக கால்நடைகளை ஏற்றிச்சென்ற லொறியொன்றுடன் மோட்டார் சைக்கிளுடன் மோதியதில் இந்த விபத்து சம்பவித்துள்ளது.

யாழ்.இந்துக் கல்லூரியில் உயர்தரத்தில் கல்வி கற்கும் 19 வயதான மாணவனே விபத்தில் உயிரிழந்துள்ளார்.

விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை சாவகச்சேரி பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.

இதேவேளை, தலவாக்கலை ஹட்டன் பிரதான வீதியின் டெவன் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் ஐவர் காயமடைந்துள்ளனர்.

நேற்றிரவு(12) 10.30 அளவில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

நோர்வூட் பகுதியிலிருந்து பயணித்த காரும் தலவாக்கலையிலிருந்து கொட்டகலை நோக்கி சென்ற பெளசர் ஒன்றும் நேருக்கு நேர் மோதியுள்ளன.

காரில் பயணித்த ஐவரும் காயமடைந்த நிலையில் கிளங்கன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

விபத்து தொடர்பான விசாரனைகளை திம்புள்ள பத்தனை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here


Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles