பாம்பு தீண்டியதில் 56 வயது பெண் பலி

Colombo (News 1st) பசறை – கோணக்கலை கீழ்பிரிவு தோட்டத்தில் பணிபுரிந்த பெண்ணொருவர் பாம்பு தீண்டியதில் உயிரிழந்துள்ளார்.

பசறை பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட கோணக்கலை கீழ்பிரிவு தோட்டத்தில் பணிபுரியும் தோட்ட தொழிலாளியொருவரை கடந்த 16ஆம் திகதி பாம்பு தீண்டியிருந்தது.

குறித்த பெண் சிகிச்சைகளுக்காக பசறை பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் மேலதிக சிகிச்சைகளுக்காக பதுளை பொது வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார்.

எனினும், சிகிச்சை பலனின்றி 56 வயதான கந்தன் முத்துலட்சுமி நேற்று முன்தினம்(18) வைத்தியசாலையில் உயிரிழந்துள்ளார்.

பிரேத பரிசோதனைகளின் பின்னர் சடலம் உறவினர்களிடம் நேற்று(19) கையளிக்கப்பட்டு நாளை(21) இறுதிக் கிரியைகள் நடைபெறவுள்ளன.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here


Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles