இந்திய மீனவர்கள் மீது இலங்கை கடல் கொள்ளையர்கள் தாக்குதல்?

Colombo (News 1st) இந்திய கடற்பரப்பில் மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த நான்கு இந்திய மீனவர்கள் மீது இலங்கை கடல் கொள்ளையர்கள் தாக்குதல் நடத்தியதாக தமிழக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

ஆர்காட்டுத்துறையில் இருந்து தென்கிழக்கில் 22 கடல் மைல் தொலைவில் மீன் பிடித்துக் கொண்டிருந்த இந்திய மீனவர்களை இலங்கை கடல் கொள்ளையர்கள்  தாக்கியதாக சன் செய்தி வௌியிட்டுள்ளது.

இந்த தாக்குதலில் 5 இலட்சம் பெறுமதியான மீன்பிடி உபகரணங்கள் சேதமடைந்துள்ளதாக அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இலங்கை கொள்ளையர்கள் தங்களைத் தாக்கி, வலைகளை எடுத்துச்சென்றதாக மீனவர்கள் முறைப்பாடு செய்துள்ளனர்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here


Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles