இலங்கை கடற்படையினரால் பறிமுதல் செய்யப்பட்ட 33 படகுகளுக்கு நிவாரணம் வழங்க தமிழக அரசு உத்தரவு

Tamil Nadu: இலங்கை கடற்படையினரால் பறிமுதல் செய்யப்பட்டு, தற்போது பயன்படுத்த இயலாத நிலையில் உள்ள தமிழக மீனவர்களின் படகுகளுக்கு நிவாரணம் வழங்க தமிழக அரசு தீர்மானித்துள்ளது.

இதற்கான அரசாணை வௌியிடப்பட்டுள்ளதாக The Hindu செய்தி வௌியிட்டுள்ளது.

இதற்கிணங்க, இலங்கை கடற்படையால் பறிமுதல் செய்யப்பட்டு தற்போது பயன்படுத்த இயலாத நிலையில் உள்ள தமிழக மீனவர்களின் 33 படகுகளுக்கு நிவாரணம் வழங்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

இதன் பிரகாரம் 33 படகுகளுக்கும் 1.23 கோடி இந்திய ரூபா நிவாரணம் வழங்கப்படவுள்ளது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here


Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles