திருகோணமலை – மதுரங்குடா களப்பில் தோணி கவிழ்ந்ததில் நீரில் மூழ்கி இளைஞர் பலி

Colombo (News 1st) திருகோணமலை – குச்சவௌி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மதுரங்குடா களப்பில் நீரில் மூழ்கி இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

செந்தூர் பகுதியை சேர்ந்த 19 வயதான இளைஞர் ஒருவரே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த இளைஞர், மதுரங்குடா களப்பில் மீன் பிடித்துக்கொண்டிருந்த போது, தோணி கவிழ்ந்ததில் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் கூறினர்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை குச்சவௌி பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here


Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles