அமரர் சுப்பிரமணியம் பசுபதிப்பிள்ளை

தோற்றம்15 JUN 1948, மறைவு02 OCT 2022

முன்னாள் வடமகாணசபை உறுப்பினர்

வயது 74

நெடுந்தீவு, Sri Lanka (பிறந்த இடம்) பாண்டியன்குளம், Sri Lanka கிளிநொச்சி, Sri Lanka

திதி: 21.09.2023

யாழ். நெடுந்தீவைப் பிறப்பிடமாகவும், பாண்டியன்குளம், கிளிநொச்சி ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த சுப்பிரமணியம் பசுபதிப்பிள்ளை அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.

ஆண்டுகள் ஒன்று
உருண்டோடி மறைந்தாலும்
அகலாது உங்கள் அன்புமுகம்
எம் நெஞ்சை விட்டு
அன்போடும் பாசத்தோடும் அரவணைத்த
எங்கள் அன்புத் தந்தையே!

எங்களை விட்டுப் பிரிந்ததேன்
பசுமையான எம் வாழ்வு
பரிதவித்துப் போனதுவோ!

இன்று பிரிவு என்னும் துயரால்
ஓராண்டு ஓடி மறைந்தாலும்
எம் உள்ளங்களில் என்றும் நீங்காமல்
நிலைத்து வாழ்வீர்கள்!

ஓராண்டு அல்ல
எத்தனை ஆண்டுகள் ஓடி மறைந்தாலும்
எங்கள் நெஞ்சிருக்கும்
வரை உங்கள் நினைவிருக்கும்

அப்பா உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்..!

தகவல்: குடும்பத்தினர்

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here


Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles