பொலிஸ் அதிகாரிகளை தாக்கிய 6 சந்தேகநபர்கள் கைது

Colombo (News 1st) கல்கிசையில் பொலிஸ் உத்தியோகத்தர்கள் மீது தாக்குதல் நடத்திய 6 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நேற்று(24) பிற்பகல் கல்கிசை கடலில் பாறைகள் உள்ள ஆபத்தான இடத்தில் சிலர் நீராடுவதாக கரையோர பாதுகாப்புப் பிரிவு அதிகாரிகளுக்கு தகவல்  கிடைக்கப்பெற்றதாக பொலிஸார் தெரிவித்தனர்.

அதனையடுத்து, அங்கு சென்ற பொலிஸ் அதிகாரிகள், நீராடிக்கொண்டிருந்தவர்களை அவ்விடத்திலிருந்து வெளியேறுமாறு அறிவுறுத்தியுள்ளனர்.

அந்த சந்தர்ப்பத்தில் ​​குறித்த நபர்கள் உத்தியோகத்தர்கள் மீது தாக்குதல் நடத்தியதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பில் இரத்மலானை, பிலியந்தலை, அஹுங்கல்ல பிரதேசங்களைச் சேர்ந்தவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தாக்குதலுக்கு இலக்கான 2 பொலிஸ் உத்தியோகத்தர்கள் சிகிச்சைக்காக களுபோவில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.

அவர்களில் ஒருவர் சிகிச்சை பெற்று வௌியேறியுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.

 

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles