மோட்டார் சைக்கிளும் டிப்பரும் மோதி விபத்து; வாழைச்சேனை இளைஞர்கள் இருவர் பலி

Colombo (News 1st) மட்டக்களப்பு – திருகோணமலை பிரதான வீதியின் பறங்கியாமடு பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் இளைஞர்கள் இருவர் உயிரிழந்துள்ளனர்.

மோட்டார் சைக்கிளொன்றும் டிப்பரொன்றும் மோதி  நேற்று (25) மாலை விபத்து இடம்பெற்றுள்ளது.

விபத்தில் பலத்த காயமடைந்த மோட்டார் சைக்கிள் ஓட்டுநரும் பின்னால் அமர்ந்து பயணித்தவரும் சந்திவௌி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், அவர்களில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் அறிவித்தனர்.

மற்றையவர் மேலதிக சிகிச்சைகளுக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட போதிலும் சிகிச்சை பலனின்றி அவரும் உயிரிழந்துள்ளார்.

வாழைச்சேனையை சேர்ந்த 26 வயதான இளைஞர்கள் இருவரே உயிரிழந்துள்ளதுடன், சடலங்கள் சந்திவௌி மற்றும் மட்டக்களப்பு வைத்தியசாலைகளில் வைக்கப்பட்டுள்ளன.

விபத்துடன் தொடர்புடைய டிப்பரின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை சந்திவௌி பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles