திருமதி லலிதாம்பாள் இரட்ணசோதி

பிறப்பு08 OCT 1941, இறப்பு15 OCT 2022

பிரபல வீணை ஆசிரியை

வயது 81

கொழும்பு, Sri Lanka (பிறந்த இடம்) யாழ்ப்பாணம், Sri Lanka Melbourne, Australia

கொழும்பைப் பிறப்பிடமாகவும், அவுஸ்திரேலியா Melbourne ஐ வசிப்பிடமாகவும் கொண்டிருந்த லலிதா ரட்ணசோதி அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.

திதி: 03-10-2023

ஓராண்டு கடந்தாலும்
ஆண்டுகள் பற்பல பறந்தாலும்
உங்கள் நினைவுகள் மறையாது
எங்கள் மனத்திரையில்
உங்கள் நினைவுகள் வந்து வந்து மீட்டிச் செல்கிறது
அன்று போல் இன்றும் எம்மோடு இருப்பது போல்
மனதை வருடி செல்கிறது

பெற்றவற்கு நல்மகளாய்
கணவனுக்கு உத்தம துணைவியாய்
சகோதரர்க்கு சிறந்த நண்பியாய்
பிள்ளைகளுக்கு பாசமுள்ள தாயாய்
உற்றார்க்கு நல் உறவாய்,

குடும்ப விளக்காய் ஒளி வீசி அணைந்து போனாலும்
இன்னும் எம் மனதில் ஒளி வீசி
செவியோடு கதை பேசி
எம்மோடு வாழ்வது போல்
ஓர் உணர்வைத் தருகின்றீர்!

மண்ணின் மடியில் இருந்து
இறைவன் அடி தேடி பறந்து போன உங்களை
நாம் மறந்து போவோமா?

உங்கள் ஆத்மா சாய் பாபாவின் மடியில்
அமைதியாய் உறங்க எல்லாம் வல்ல
இறைவனை வேண்டி
கண்கலங்கி வணங்குகிறோம்

தகவல்: கணவர், பிள்ளைகள்

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here


Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles