டிப்போக்களுக்கு அருகில் ஆபத்து ஏற்படும் வகையிலுள்ள மரங்களை அகற்றுமாறு பணிப்புரை – இலங்கை போக்குவரத்து சபை

Colombo (News 1st) டிப்போ மற்றும் பஸ் தரிப்பிடங்களுக்கு அருகில் ஆபத்து ஏற்படும் வகையிலுள்ள மரங்களை அகற்றுமாறு பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளதாக இலங்கை போக்குவரத்து சபை தெரிவித்துள்ளது.

அண்மையில் கொள்ளுப்பிட்டியில் பஸ்ஸொன்றின் மீது மரமொன்று முறிந்து வீழ்ந்த சம்பவத்தின் அடிப்படையில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக சபையின் தலைவர் லலித் டி அல்விஸ் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, வெள்ளம் சூழ்ந்துள்ள பகுதிகளில் பொலிஸார் மற்றும் இடர் முகாமைத்துவ பிரிவினரின் அறிவுறுத்தல்களை மீறி, பஸ் போக்குவரத்தில் ஈடுபட வேண்டாம் எனவும் அனைத்து டிப்போகளுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here


Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles