டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும்

0

Colombo (News 1st) நிலவும் மழையுடனான வானிலையால் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவு குறிப்பிட்டுள்ளது.

13 சுகாதார வைத்திய அதிகாரிகள் பிரிவினை சேர்ந்த பகுதிகள் டெங்கு அதி அபாய வலயமாக காணப்படுவதாக தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவின் பணிப்பாளர் விசேட வைத்திய நிபுணர் டொக்டர் நளின் ஆரியரத்ன குறிப்பிட்டார்.

வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் 67,051 டெங்கு நோயாளர்கள் அடையாளங்காணப்பட்டுள்ளனர்.

இதனிடையே, இந்த மாதத்தில் மாத்திரம் 2,568  டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here