தலைமன்னார் முனையத்தை அண்மித்த பகுதியை துறைமுகமாக பெயரிட தீர்மானம்

Colombo (News 1st) தலைமன்னார் முனையத்தை அண்மித்த பகுதியை துறைமுகமாக வர்த்தமானியில் பெயரிடுவதற்கு கப்பற்றுறை மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சு தீர்மானித்துள்ளது. 

எதிர்வரும் நாட்களில் இதற்கான வர்த்தமானி ​வெளியிடப்படவுள்ளதாக கப்பற்றுறை மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சின் செயலாளர் K.D.S. ருவன் சந்திர தெரிவித்தார். 

இந்தியாவின் இராமேஸ்வரத்திற்கும் தலைமன்னாருக்கும் இடையில் பயணிகள் கப்பல் சேவையை ஆரம்பிப்பதே இதன் ​நோக்கமாகும். 

இந்தக் கப்பல் சேவையை இலாபமீட்டும் செயற்றிட்டமாக மாற்றுவது தொடர்பில் கலந்துரையாடப்படுவதாகவும் கப்பற்றுறை மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சின் செயலாளர்  K.D.S. ருவன் சந்திர கூறினார். 

துறைமுகமாக அறிவிக்கப்பட்டதன் பின்னர் தலைமன்னாரின் உட்கட்டமைப்பு வசதிகளை விரிவுபடுத்துவதற்கு அதிக வாய்ப்புகள் காணப்படுவதாகவும் அவர் கூறினார். 
 

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here


Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles