ஹப்புத்தளையிலிருந்து பொரலந்தை வரையான வீதிப் போக்குவரத்து முற்றாக பாதிப்பு

ஹப்புத்தளையிலிருந்து பொரலந்தை வரையான வீதிப் போக்குவரத்து இன்று காலை கடுமையாக பாதிக்கப்பட்டது.

இன்று(06) அதிகாலை 13 ஆம் மைல் கல் பகுதியில் மண்சரிவு ஏற்பட்டுள்ளது.

இதனால் ஹப்புத்தளையிலிருந்து பொரலந்தை வரையான வீதிப் போக்குவரத்தில் முற்றாக தடையேற்பட்டதென பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இவ்வாறான சந்தர்ப்பத்தில் ஹப்புத்தளையிலிருந்து பொரலந்தை நோக்கிப் பயணிக்கும் வாகனங்கள் தியத்தலாவை, கிரிந்த ஊடாக செல்ல முடியுமென பொலிஸார் அறிவுறுத்தியுள்ளனர்.

பொரலந்தையிலிருந்து ஹப்புத்தளைக்கு பயணிக்கும் வாகனங்கள், கிரிந்த, தியத்தலாவை ஊடாக செல்ல முடியுமெனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

வீதிப் போக்குவரத்து வழமைக்கு கொண்டுவரப்படும் வரை மாற்றுவீதிகளை பயன்படுத்துமாறும் பொலிஸார் பொதுமக்களை கேட்டுக்கொண்டுள்ளனர்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here


Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles