டெல்லியில் செயற்கை மழை திட்டத்தை முன்னெடுப்பது குறித்து பரிசீலனை

Colombo (News 1st) டெல்லியில் வளிமாசு அதிகரித்துவரும் நிலையில், வளி மாசை கட்டுப்படுத்தும் நோக்கில் செயற்கை மழை திட்டத்தை முன்னெடுப்பது தொடர்பில் அரசாங்கம் பரிசீலித்து வருவதாக டெல்லியின் சுற்றுச்சூழல் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

இந்த திட்டத்தை அமுல்படுத்த உயர்நீதிமன்றத்தின் அனுமதி பெறப்பட வேண்டுமெனவும் அவ்வாறு அனுமதி கிடைக்கும் பட்சத்தில் வானிலையை கருத்திற்கொண்டு இந்த திட்டமானது இம்மாத இறுதியில் முன்னெடுக்கப்படலாம் எனவும் அமைச்சர் கூறியுள்ளார்.

டெல்லியில் தொடர்ச்சியாக வளிமாசு அதிகரித்துவரும் நிலையில் செயற்கை மழை திட்டத்திற்காக பரிந்துரை செய்யப்படுவது இது முதற்தடவை அல்ல. எனினும், இது சிக்கலான விடயம் எனவும் நீண்ட கால சுற்றுச்சூழல் தாக்கத்தை புரிந்துகொள்ள ஆராய்ச்சி தேவை எனவும் வல்லுநர்கள் சிலர் தெரிவித்துள்ளனர்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here


Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles