மரம் நடுவதற்காக கென்யாவில் விசேட விடுமுறை

Colombo (News 1st) 100 மில்லியன் மரங்களை நடுவதற்காக கென்யாவில் விசேட விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.

10 ஆண்டுகளில் 15 பில்லியன் மரங்களை நாட்டும் அரசாங்கத்தின் இலக்கின் ஒரு பகுதியாக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இந்தச் செயற்றிட்டத்தில் ஒவ்வொரு கென்ய பிரஜையும் பங்கேற்பதற்காக விடுமுறை வழங்கப்படுவதாக அந்நாட்டு சுற்றாடல் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

100 மில்லியன் மரங்கள் எனும் இலக்கை அடைவதற்காக ஒவ்வொரு பிரஜையும் ஆகக்குறைந்தது இரண்டு மரங்களை நாட்ட வேண்டுமென வலியுறுத்தப்பட்டுள்ளது.

இந்த மரநடுகைத் திட்டத்திற்காக 150 மில்லியன் கன்றுகள் நாற்றுமேடைகளில் தயார் செய்யப்பட்டுள்ளதாக கென்ய அரசாங்க தகவல்கள் தெரிவிக்கின்றன.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here


Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles