சந்தேகநபர்களை நிரபராதிகள் என நிரூபிக்க 15 வருடங்கள் எடுத்துள்ளது: குரலற்றவர்களின் குரல் அமைப்பு கவலை

Colombo (News 1st) பாகிஸ்தான் உயர்ஸ்தானிகர் மீதான குண்டுத் தாக்குதல் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட மூன்று அரசியல் கைதிகள் 16 வருடங்களின் பின்னர் நிரபராதிகள் என விடுதலை செய்யப்பட்டுள்ளமை மகிழ்ச்சியளிப்பதாக குரலற்றவர்களின் குரல் அமைப்பு அறிக்கை மூலம் தெரிவித்துள்ளது.

எனினும், சந்தேகநபர்களை நிரபராதிகள் என நிரூபிப்பதற்கு 15 வருடங்கள் எடுத்துள்ளமை கவலையளிப்பதாக அந்த அறிக்கையில்  தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, சந்தேகநபர்களாக நீண்டகாலம் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நான்கு அரசியல் கைதிகளும் காலதாமதமின்றி விடுவிக்கப்பட வேண்டும் என குரலற்றவர்களின் குரல் அமைப்பு வலியுறுத்தியுள்ளது. 
 
15 தொடக்கம் 28 வருடங்களாக தடுத்து வைக்கப்பட்டுள்ள தண்டனைக் கைதிகள் 10 பேரையும் ஜனாதிபதி பொது மன்னிப்பு அளித்து விடுவிக்க வேண்டும் எனவும் குரலற்றவர்களின்  குரல் அமைப்பு விடுத்துள்ள ஊடக அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here


Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles