நுரைச்சோலை லக்விஜய மின் உற்பத்தி நிலையத்தின் இரண்டாம் மின்பிறப்பாக்கி செயலிழப்பு

Colombo (News 1st) தொழில்நுட்பக் கோளாறு காரணமாக நுரைச்சோலை லக்விஜய மின் உற்பத்தி நிலையத்தின் இரண்டாம் மின் பிறப்பாக்கியை செயலிழக்கச் செய்வதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.

மின் உற்பத்தி நிலையத்தின் இரண்டாவது மின்பிறப்பாக்கியில் ஏற்பட்ட திடீர் கோளாறு காரணமாக, மின் உற்பத்தியை நிறுத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.

அதன்படி, நுரைச்சோலை மின் உற்பத்தி நிலையத்தின் இரண்டு மின்பிறப்பாக்கிகள் தற்போது செயலிழந்துள்ளன.

மின் உற்பத்தி நிலையத்தின் மூன்றாவது மின் பிறப்பாக்கி பராமரிப்பு பணிக்காக ஏற்கனவே அனுப்பப்பட்டுள்ளது.

எனினும், மின்சார விநியோகத்தில் எவ்வித இடையூறும் இல்லை என மின்சார சபை தெரிவித்துள்ளது.

பராமரிப்பு காலத்தில், அதிகபட்சமாக நீர் மின்சாரத்தை உற்பத்தி செய்து, தொடர்ந்து மின்சாரம் வழங்க முயற்சி மேற்கொள்ளப்படும் எனவும் இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here


Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles