மறு அறிவித்தல் வரை COPE குழு கூட்டங்கள் நடத்தப்பட மாட்டாது: சபாநாயகர் அறிவிப்பு

Colombo (News 1st) மறு அறிவித்தல் வரையில் COPE குழு கூட்டங்கள் நடத்தப்பட மாட்டாது என சபாநாயகர் மகிந்த யாப்பா அபேவர்தன பாராளுமன்றத்திற்கு அறிவித்துள்ளார்.

தற்போதைய COPE குழுத் தலைவருடன் பணியாற்ற முடியாதென இன்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பாராளுமன்றத்தில் சுட்டிக்காட்டினர்.

இன்று (17) பிற்பகல் COPE குழு கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த போதிலும், எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அதில் பங்கேற்க மாட்டார்கள் என  எதிர்க்கட்சித் தலைவர் சுட்டிக்காட்டினார். 

இந்த விடயம் தொடர்பில் கவனம் செலுத்திய சபாநாயகர், மறு அறிவித்தல் வரையில் COPE குழு கூட்டங்கள் நடத்தப்பட மாட்டாதென அறிவித்தார்.
 

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here


Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles