நாட்டின் பல பகுதிகளில் இன்றிரவு கடும் மின்னல் தாக்கம் ஏற்படக்கூடும் என எச்சரிக்கை

Colombo (News 1st) நாட்டின் பல பகுதிகளில் இன்றிரவு கடும் மின்னல் தாக்கம் ஏற்படக்கூடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மேல், மத்திய, கிழக்கு, சப்ரகமுவ, வட மத்திய, வட மேல், ஊவா மாகாணங்களிலும் முல்லைத்தீவு, வவுனியா, மன்னார் மாவட்டங்களிலும் மாலை அல்லது இரவு வேளையில் இடைக்கிடையே மழையுடன் கூடிய கடும் மின்னல் தாக்கங்கள் ஏற்படுமென வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.

இடியுடன் கூடிய மழை பெய்யும் சந்தர்ப்பங்களில் பலத்த காற்று வீசுமென்பதுடன், மின்னல் தாக்கங்களின் போது ஏற்படும் அனர்த்தங்களை தவிர்ப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது. 

இதனிடையே, மத்திய, ஊவா, சப்ரகமுவ மாகாணங்களில் 100 மில்லிமீட்டர் மழைவீழ்ச்சி பதிவாகும் சாத்தியம் காணப்படுவதாகவும் வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. 

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here


Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles