யாழ்.உரும்பிராயில் முதியவர் கொலை

Colombo (News 1st) யாழ்ப்பாணம் – உரும்பிராய் தெற்கு பகுதியில் நேற்றிரவு(18) முதியவரொருவர் தாக்கி கொலை செய்யப்பட்டுள்ளார்.

உணவகம் ஒன்றில் பணியாற்றிய உரும்பிராய் தெற்கைச் சேர்ந்த  68 வயதுடைய முதியவரே தாக்குதலில் உயிரிழந்துள்ளார்.

உணவகத்தில் ஏற்பட்ட முரண்பாடே கொலைக்கான காரணம் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சம்பவம் தொடர்பில் குறித்த பகுதியைச் சேர்ந்த 46 வயதுடைய சந்தேகநபர் கோப்பாய் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பாக கோப்பாய் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here


Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles