ரயில் என்ஜின்களுக்கு பற்றாக்குறை: உரிய நேரத்தில் ரயில்களை சேவையில் ஈடுபடுத்த முடியாத நிலை

Colombo (News 1st) ரயில் என்ஜின்களின் பற்றாக்குறை காரணமாக உரிய நேரத்தில் ரயில்களை சேவையில் ஈடுபடுத்த முடியாதுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.  

இதனால்,  நாளாந்தம் ரயில் பயணங்கள் சிலவற்றை இரத்து செய்ய வேண்டிய நிலைமை ஏற்படுவதாக ரயில்வே போக்குவரத்து அத்தியட்சகர் M.J.இதிபொலகே தெரிவித்தார். 

உதிரிப்பாகங்களுக்கு ஏற்பட்டுள்ள பற்றாக்குறையினால் ரயில் என்ஜின்களை திருத்த முடியாத நிலையும் ஏற்பட்டுள்ளது. 

வழமையான ரயில் போக்குவரத்திற்கு 70 ரயில் என்ஜின்களும் 50 டீசல்- இலத்திரனியல் இயந்திரத் தொகுதிகளும் தேவைப்படுவதாக ரயில்வே போக்குவரத்து அத்தியட்சகர் தெரிவித்தார். 

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here


Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles