வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு இன்று(21)

Colombo (News 1st) 2024 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் மீதான பாராளுமன்ற விவாதம் 7 ஆவது நாளாக இன்றும்(21) இடம்பெறவுள்ளது.

அதற்கமைய, வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு இன்று(21) நடைபெறவுள்ளது. 

வரவு செலவுத் திட்ட முன்மொழிவு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் கடந்த 13 ஆம் திகதி பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது.

அதற்கமைய, வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு இன்று மாலை 5.30 க்கு நடைபெறவுள்ளது.

வரவு செலவுத் திட்ட குழுநிலை விவாதம் அல்லது வரவு செலவுத் திட்டம் மீதான மூன்றாம் வாசிப்பு விவாதம் எதிர்வரும் 23 ஆம் திகதி ஆரம்பமாகி டிசம்பர் 13 ஆம் திகதி வரை முன்னெடுக்கப்படவுள்ளது.

வரவு செலவுத் திட்ட குழுநிலை விவாதம் மீதான வாக்கெடுப்பு டிசம்பர் 13 ஆம் திகதி மாலை 5.30 க்கு இடம்பெறவுள்ளது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here


Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles