செப்டம்பர் மாதத்திற்கான அஸ்வெசும கொடுப்பனவுகள் நாளை (23) முதல் வழங்கப்படவுள்ளன

Colombo (News 1st) அஸ்வெசும பயனாளர்கள் செப்டம்பர் மாதத்திற்கான கொடுப்பனவுகளை நாளை (23) முதல் பெற்றுக்கொள்ள முடியுமென நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்தார்.

13,77,000 பயனாளி குடும்பங்களுக்காக 8571 மில்லியன் ரூபாவை வங்கிகளுக்கு விடுவித்துள்ளதாக அவர் குறிப்பிட்டார். 

ஒக்டோபர், நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களுக்கான கொடுப்பனவுகளை வருட இறுதிக்கு முன்பாக செலுத்தி முடிக்கவுள்ளதாகவும் நிதி இராஜாங்க அமைச்சர் தெரிவித்தார். 

அஸ்வெசும திட்டத்திற்காக புதிதாக விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்ளும் நடவடிக்கைகள் அடுத்த மாதம் ஆரம்பிக்கப்படவுள்ளன.

இதனிடையே முதியோர், சிறுநீரக நோயாளிகள் மற்றும் அங்கவீனமுற்றோருக்கான கொடுப்பனவுகள் தற்போது வழங்கப்பட்டுள்ளதாகவும் நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க கூறினார். 

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here


Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles