17 வயதுக்குட்பட்ட கூடைப்பந்தாட்டம் – சென்.ஜோன்ஸ் கல்லூரி அணி சம்பியன்

யாழ். மாவட்ட கூடைப்பந்தாட்ட சங்கத்தினால் யாழ் மாவட்டத்திலுள்ள அனைத்துப் பாடசாலைக்களுக்குமிடையில் நடாத்தப்பட்ட கூடைப்பந்தாட்ட போட்டியில் 17வயதுக்குட்பட்டவர்களுக்கான போட்டியில் பத்துவருடகால நீண்டதொரு இடைவெளியின் பின்னர் யாழ். சென். ஜோன்ஸ் கல்லூரி அணியினர் சம்பியன்ஸ் ஆக வந்துள்ளனர்.

நேற்று (07) நடைபெற்ற இறுதிப்போட்டியில் இவர்கள் எந்தவொரு ஆட்டத்திலும் தோற்காமல் வெற்றிவாகை சூடியுள்ளது குறிப்பிடத்தக்கது.

அத்துடன் சென். ஜோன்ஸ் கல்லூரியின் 15 வயதுக்குட்பட்ட கூடைப்பந்தாட்ட அணியினரும் இறுதிப் போட்டிக்கு தெரிவாகியுள்ளனர்.

வெறுமனே கல்வி மட்டும் ஓர் மனிதனை பூரணமாக்கிவிட முடியாது. மாணவர்களினை விளையாட்டில் ஈடுபடுத்துவத்தில் பெற்றோரும் பாடசாலைகளும் முன்னிற்க வேண்டும்.

கிரிக்கட்டுக்கு மட்டும் முக்கியத்துவம் கொடுக்கும் பல பாடசாலைகளுக்கு மத்தியில், இவர்களின் வெற்றியின் பின்னால் மாணவர்களிற்கு உறுதுணையாய் இருக்கும் அதிபர், கூடைப்பந்தாட்ட பொறுப்பாசிரியர், பயிற்றுவிப்பாளர், பெற்றோர்கள், பழைய மாணவர்கள் போன்றோரும் பாராட்டப்பட வேண்டியவர்களே.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here


Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles