களனி பல்கலையின் மூடப்பட்டிருந்த 03 பீடங்களும் நாளை(11) மீள திறப்பு

Colombo (News 1st) களனி பல்கலைக்கழகத்தில் மூடப்பட்டிருந்த 03 பீடங்களின் கல்வி நடவடிக்கைகளும் நாளை(11) மீள ஆரம்பமாகவுள்ளன.

அதற்கமைய, வர்த்தகம் மற்றும் முகாமைத்துவ பீடம், விஞ்ஞான பீடம், கணினி மற்றும் தொழில்நுட்ப பீடம் என்பவற்றின் கல்வி நடவடிக்கைகள் நாளை(11) மீண்டும் ஆரம்பமாகவுள்ளன.

மானுடவியல் மற்றும் சமூகவியல் பீடத்தை எதிர்வரும் 18 ஆம் திகதி திறக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

களனி பல்கலைக்கழகத்தின் குறித்த 04 பீடங்களும் கடந்த 04 ஆம் திகதி மூடப்பட்டன.

பல்கலைக்கழக பாதுகாப்பு உத்தியோகத்தர் மீது தாக்குதலை நடத்தியமை, மேலும் இரு அதிகாரிகளை கடத்திச்சென்று தடுத்து வைத்திருந்தமை தொடர்பான சம்பவங்கள் பதிவானதை அடுத்து குறித்த 04 பீடங்களின் கல்வி நடவடிக்கைகளை இடைநிறுத்த தீர்மானிக்கப்பட்டது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here


Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles