Monday, February 9, 2026
Homeஆபாசப் படங்களை பகிர்ந்தாரா இயக்குனர் லோகேஷ் கனகராஜ்?

ஆபாசப் படங்களை பகிர்ந்தாரா இயக்குனர் லோகேஷ் கனகராஜ்?

மாநகரம், கைதி, மாஸ்டர், விக்ரம், லியோ என அடுத்தடுத்து வெற்றி படங்களைக் கொடுத்து தமிழ் சினிமாவின் நம்பர் 1 இயக்குனர் என்ற பெயரைத் தற்போது தக்கவைத்திருக்கும் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் புதிய ஒரு சர்ச்சையில் சிக்கியுள்ளார்.

லோகேஷின் பேஸ்புக் பக்கத்தில் இருந்து ஆபாச படங்கள் பகிரப்பட்டு வருவதாக குற்றச்சாட்டுக்கள் எழுந்த நிலையில் இதற்கு விளக்கமளிக்காமல் லோகேஷ் அமைதி காத்து வந்தார். பின்னர் லோகேஷ் கனகராஜ் குறித்த பதிவுகளின் ஸ்கிரீன் ஷொட்கள் வாட்ஸ் அப்பில் பரவத்தொடங்கியன.

இதுவரை அமைதி காத்த லோகேஷ் தற்போது மௌனம் கலைந்துள்ளார். தனக்கு ட்விட்ர் மற்றும் இன்ஸ்டாகிராம் பக்கங்கள் மட்டுமே உள்ளதாகவும் பேஸ்புக்கில் எவ்வித பக்கங்களோ , கணக்குகளோ இல்லை அப்படி இருந்தால் அதை பின்தொடர வேண்டாம் எனவும் தெரிவித்துள்ளார்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular