இந்திய மீனவர்கள் 6 பேர் வடக்கு கடற்பரப்பில் கைது

Colombo (News 1st) இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்து மீன் பிடித்த குற்றச்சாட்டில் 06 இந்திய மீனவர்கள் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நேற்றிரவு(13) முன்னெடுக்கப்பட்ட ரோந்து நடவடிக்கையில், படகொன்றுடன் இந்திய மீனவர்கள் காரைநகர் பகுதியில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட மீனவர்கள் 06 பேரும் நேற்று காங்கேசன்துறை துறைமுகத்திற்கு அழைத்து வரப்பட்டதாக கடற்படை பேச்சாளர் கெப்டன் கயான் விக்ரமசூரிய தெரிவித்தார்.

06 பேரும் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக கடற்றொழில் திணைக்களத்திடம் ஒப்படைக்கப்படவுள்ளனர்.

இதேவேளை, கடந்த ஞாயிற்றுக்கிழமையும் இந்திய மீனவர்கள் 25 பேர் கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here


Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles