காணாமல் போன கோப்பாய் இளைஞனின் சடலம் தோட்டக்கிணற்றில் இருந்து கண்டெடுப்பு!

யாழ்ப்பாணம் கோப்பாய் பிரதேசத்தில் காணாமல் போன இளைஞன் ஒருவரது சடலம் தோட்ட கிணற்றில் நேற்றையதினம் (15) கண்டெடுக்கப்பட்டுள்ளது.

கோப்பாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட, கோப்பாய் மத்தி பகுதியில் உள்ள தோட்டக் கிணறு ஒன்றில் இருந்து 29 வயதுடைய நிரோசன் என்பவரே இவ்வாறு சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளார்.

குறித்த இளைஞன் கடந்த 13 ஆம் திகதி 4 மணியளவில் வீட்டில் இருந்து புறப்பட்டு சென்ற நிலையில் காணாமல் போயுள்ளார். இந்நிலையில் குறித்த இளைஞனை உறவினர்கள் தேடி வந்த நிலையில் தோட்டக் கிணற்றில் இருந்து அவரது சடலம் இறுதியாக கண்டெடுக்கப்பட்டுள்ளது.

அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி ஆ.ஜெயபாலசிங்கம் மேற்கொண்டார். உடற்கூற்று பரிசோதனைகளின் பின்னர் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

அதேவேளை சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளையும் முன்னெடுத்துள்ளனர்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here


Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles