வான் பாயும் மட்டத்தை எட்டியுள்ள கலா வாவி; அவதானமாக செயற்படுமாறு அறிவுறுத்தல்

Colombo (News 1st) கலா வாவி வான் பாயும் மட்டத்தை எட்டியுள்ளதால், அவதானமாக செயற்படுமாறு அப்பகுதி மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மழையுடனான வானிலையால் கலா வாவியின் வான்கதவுகள் திறக்கப்பட்டு விநாடிக்கு 15 ஆயிரம் கன அடி நீர் திறந்துவிடப்படுவதாக கலா வாவிக்கு பொறுப்பான நீர்ப்பாசன பொறியியலாளர் புத்திக மகேஷ் நவரத்ன தெரிவித்தார்.

இதனிடையே, மழையுடனான வானிலையால் இப்பன்கட்டுவ வாவியின் வான்கதவுகளும் திறக்கப்பட்டுள்ளன.

இப்பன்கட்டுவ வாவியில் விநாடிக்கு 2000 கன அடி நீர் தம்புலு ஓயாவிற்கு திறந்துவிடப்படுகின்றது.

கண்டலம நீர்த்தேக்கமும் வான் பாய்வதாக நீர்ப்பாசன பொறியியலாளர் புத்திக மகேஷ் நவரத்ன தெரிவித்துள்ளார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here


Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles