மட்டக்களப்பின் புதிய அரசாங்க அதிபராகப் பதவியேற்றார் ஜஸ்ரினா யுலேக்கா

மட்டக்களப்பு மாவட்டத்திற்கான புதிய அரசாங்க அதிபராக திருமதி. ஜஸ்ரினா யுலேக்கா முரளீதரன் இன்று (18) தனது கடமைகளைப் பொறுப்பேற்றுக்கொண்டார்.

32 வருடகாலமாக இலங்கை நிருவாக சேவையில் பல்வேறு பதவிகளில் இருந்த இவர், கடந்த 2022.01.07 ஆம் திகதி கிழக்கு மாகாண சுகாதார அமைச்சின் செயலாளராக கடமையாற்றி வந்த நிலையில், கடந்த 13ஆம் திகதி மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபராக நியமிக்கப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் இன்றைய தினம் நடைபெற்ற பதவியேற்பு நிகழ்வில் புதிய மாவட்ட அரசாங்க அதிபரின் குடும்பத்தினர், மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திருமதி.சுதர்சனி ஸ்ரீகாந்த் உள்ளிட்ட மாவட்ட செயலக உயரதிகாரிகள் உத்தியோகத்தர்கள் எனப் பலரும் கலந்துகொண்டிருந்தனர்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here


Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles