Monday, February 9, 2026
Homeசர்ச்சைக்குரிய மருந்து கொள்வனவு குறித்து CID-இனால் கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் அரச இரசாயன பகுப்பாய்வாளருக்கு அனுப்பிவைப்பு

சர்ச்சைக்குரிய மருந்து கொள்வனவு குறித்து CID-இனால் கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் அரச இரசாயன பகுப்பாய்வாளருக்கு அனுப்பிவைப்பு

Colombo (News 1st) சர்ச்சைக்குரிய மருந்து கொள்வனவு தொடர்பில் குற்றப்புலனாய்வு திணைக்களத்தினால் கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் அரச இரசாயனப் பகுப்பாய்வாளருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

குறித்த ஆவணங்களில் காணப்படும் கையொப்பங்களை பரிசோதிப்பதற்காக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் சிரேஷ்ட அதிகாரியொருவர் தெரிவித்தார். 

சுகாதார அமைச்சின் மேலதிக செயலாளர் சமன் ரத்நாயக்கவின் அலுவலகத்தில் கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் உள்ளிட்ட மேலும் சில ஆவணங்கள் அரச இரசாயனப் பகுப்பாய்வாளருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக குறித்த அதிகாரி கூறினார்.

சுகாதார அமைச்சின் மேலதிக செயலாளர் சமன் ரத்நாயக்கவிடம் குற்றப்புலனாய்வு திணைக்களத்தினர் கடந்த 20 ஆம் திகதி விசாரணை நடத்தியிருந்தனர். 

சர்ச்சைக்குரிய ஹியூமன் இமியூனோகுளோபியூலின் மருந்து கொள்வனவு தொடர்பில் குறித்த விசாரணை இடம்பெற்றது. 

குறித்த அலுவலகத்தில் காணப்பட்ட ஆவணங்களும் 2 நாட்களாக பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டன. 

சம்பவம் தொடர்பில் சுகாதார அமைச்சின் முன்னாள் செயலாளர் ஜனக ஸ்ரீ சந்திரகுப்த, குற்றப்புலனாய்வு திணைக்களத்தினரால் கைது செய்யப்பட்டு தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். 

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular