மின்சார வேலியில் சிக்கி காட்டு யானை உயிரிழப்பு

Colombo (News 1st) அனுராதபுரம் – மதவாச்சி, ஹெலம்பகஸ்வெவெ பகுதியில் மின்சார வேலியில் சிக்கி காட்டு யானை உயிரிழந்துள்ளது.

22 வயது மதிக்கத்தக்க காட்டு யானையே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக வன ஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் தெரிவித்தனர்.

உழுந்து சேனையொன்றினுள் நுழைய முற்பட்ட போதே குறித்த யானை மின்சார வேலியில் சிக்கி உயிரிழந்துள்ளதாக திணைக்கள அதிகாரிகள் குறிப்பிட்டனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை அனுராதபுரம் வன ஜீவராசிகள் திணைக்களத்தினர் முன்னெடுத்துள்ளனர்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here


Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles