மின்வெட்டு தமது தவறினாலேயே ஏற்பட்டதாக மின்சார சபை தெரிவிப்பு

Colombo (News 1st) நாடளாவிய ரீதியில் அண்மையில் ஏற்பட்ட மின்வெட்டு தமது தவறினாலேயே ஏற்பட்டதாக இலங்கை மின்சார சபை ஏற்றுக்கொண்டுள்ளது. 

குறித்த சம்பவம் தொடர்பில் இலங்கை பொது பயன்பாடுகள் ஆணைக்குழு முன்னிலையில் விடயங்களை முன்வைத்த போதே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய குறித்த விடயம் தொடர்பான மேலதிக நடவடிக்கைகள் தொடர்பில் கலந்துரையாடுவதற்காக ஆணைக்குழு கூடவுள்ளதாக பொது பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர், பேராசிரியர் மஞ்சுல பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். 

கொத்மலை முதல் பியகம வரையிலான மின் விநியோகக் கட்டமைப்பில் மின்னல் தாக்கம் ஏற்பட்டமையினால், கடந்த 09 ஆம் திகதி நாடளாவிய ரீதியில் மின்வெட்டு ஏற்பட்டது.

மின் விநியோகத்தை வழமைக்கு கொண்டுவர பல மணித்தியாலங்கள் கடந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here


Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles