களஞ்சியசாலையில் தீ விபத்து – இருவர் உயிரிழப்பு

யாழ் – பருத்தித்துறை பகுதியில் உள்ள களஞ்சியசாலையொன்றில் இன்று (02) அதிகாலை ஏற்பட்ட பாரிய தீ விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர்.

மலையகத்தின் உடப்புசல்லாவ தோட்டத்தைச் சேர்ந்த 46 வயதான ஒருவரும் 38 வயதானவருமே உயிரிழந்துள்ளனர்.

இந்நிலையில் விபத்து இடம்பெற்ற இடத்துக்கு நேரில் சென்ற பருத்தித்துறை நீதவான், அங்கு விசாரணைகளில் ஈடுபட்டார்.

இதே வேளை தடயவியல் பொலிஸாரும் குறித்த பகுதியில் சோதனை நடவடிக்கைகளை முன்னெடுத்து வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here


Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles