ஜப்பானில் 7.6 மெக்னிடியூட் அளவில் நிலநடுக்கம் பதிவானது

Colombo (News 1st) வட மத்திய ஜப்பானில் 7.6 மெக்னிடியூட் அளவில் நிலநடுக்கம் பதிவானதையடுத்து சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

ஜப்பானின் இஷிகாவா, நிகாடா மற்றும் டோயாமா ஆகிய  மாகாணங்களில் உள்ள மக்கள் அவதானமாக செயற்படுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

அதற்கமைய 5 மீட்டர் உயரம் கொண்ட சுனாமி அலைகள் கரையை தாக்குமென எதிர்வுகூறப்பட்டுள்ளது.

இதேவேளை, 2011 ஆம் ஆண்டுக்கு பிறகு ஜப்பானில் ஏற்பட்ட பாரிய நிலநடுக்கமாக இன்றைய அனர்த்தம் பதிவாகியுள்ளது.

அனர்த்தத்தினால் பதிவான பகுதிகளில் உள்ள வீதிகளில் வெடிப்புகள் ஏற்பட்டுள்ளதுடன், மண்சரிவு அனர்த்தங்களும் ஏற்பட்டுள்ளன.

பல வீடுகள் சேதமடைந்துள்ளதாகவும் சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here


Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles