யாழ்ப்பாணத்திற்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க விஜயம் செய்யவுள்ள நிலையில் அதற்கு எதிராக போராட்டங்கள் முன்னெடுக்கப்படலாம் என கருதி எட்டு பேருக்கு எதிராக யாழ். நீதிவான் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

யாழ். பொலிஸாரினால் நேற்று (02) குறித்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இதேவேளை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க யாழ்ப்பாணத்திற்கு சென்று பல்வேறு கலந்துரையாடல்களில் பங்கேற்பதற்காக 04ம் திகதி முதல் 07ம் திகதி வரை விஜயம் செய்யவுள்ளார்.

இந்நிலையில் ஜனாதிபதிக்கு எதிர்ப்பு தெரிவிப்பதற்கான போராட்டத்தை தடுக்கும் பொருட்டு தடை கட்டளை கோரி பொலிஸார் நீதிமன்றில் விண்ணப்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here