யாழ். பொலிஸாரின் நடவடிக்கை தொடர்பில் டக்ளஸ் தேவானந்தா அதிருப்தி

Colombo (News 1st) யாழ். பொலிஸாரின் நடவடிக்கை தொடர்பில் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அதிருப்தி தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி பணிக்குழு பிரதானி சாகல ரத்நாயக்கவுடன் நடைபெற்ற கலந்துரையாடலில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். 

யாழ். மாவட்டத்தில் போதைப்பொருள் கடத்தலை இல்லாதொழிக்க வேண்டுமாயின், பொலிஸார் இதனை விட வினைத்திறனாக செயற்பட வேண்டும் என அமைச்சர் இதன்போது சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்திய மீனவர்களின் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளை கட்டுப்படுத்துவதற்கு தீர்க்கமான தீர்மானம் எடுக்கப்பட வேண்டுமென அவர் கூறியுள்ளார். 

வட மாகாண பொலிஸ் உத்தியோகத்தர்கள் சிலர் போதைப்பொருள் கடத்தல்காரர்களுக்கு உதவுவதாக மக்களிடம் சந்தேகம் உள்ளதாகவும் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here


Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles