இலங்கை பெண் நோர்வேயில் கொலை

Colombo (News 1st) இலங்கையைச் சேர்ந்த தமிழ் பெண், நோர்வே Elverum  பகுதியில் சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன.

இலங்கையைச் சேர்ந்த 30 வயதான ராகவி வரதராஜன் என்பவரே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார்.

இவர் நோர்வேயில் பல் மருத்துவராக பணிபுரிந்துள்ளார்.

நோர்வே Elverum பகுதியிலுள்ள உள்ளூர் வைத்தியசாலைக்கு வௌியே இருந்த காரில் இருந்து குறித்த பெண்ணின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன.

குறித்த காரில் பலத்த காயங்களுக்குள்ளான நிலையில் மற்றுமொரு ஆண் மீட்கப்பட்டு, வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், பின்னர் அவரும் உயிரிழந்ததாக ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன.

இதனிடையே, உயிரிழந்த பெண் பலமுறை உயிர் அச்சுறுத்தலுக்குள்ளாகியதாகவும் அது தொடர்பாக பொலிஸாரிடம் அவர் முறைப்பாடு செய்திருந்ததாகவும் ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here


Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles